பொரளை நினைவேந்தல் நிகழ்வை அரசாங்கத்துக்கு நெருக்கமான குழுவே குழப்பியது: ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களே இந்நிகழ்வை குழப்புவதற்கு வந்திருக்கிறார்கள்.

OruvanOruvan

Shanakiyan Rajaputhiran Rasamanickam

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை, பொரளை பொதுமயானத்துக்கு முன்பாக அமைதியானமுறையில் நினைவுகூரும் நிகழ்வை அரசாங்கதுக்கு நெருக்கமான குழுவினரே குழப்ப முயற்சித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மேலும், இவர்கள் யார் என்பது தெளிவாகிறது. நல்லிணக்கம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசிவருகிறது.

ஆனால், அரசாங்கத்துக்கு நெருக்கமான குழுவினரே இந்த நினைவேந்தல் நிகழ்வை குழப்புவதற்காக அனுப்பப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களே இந்நிகழ்வை குழப்புவதற்கு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.