போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை விட்டு வெளியேற தடை விதிப்பு: சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மாநாட்டுச் சட்டத்தின் கீழ் நாளை (17) அவரைக் கைது செய்ய சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
பெரும் சரச்சைகளுக்கு உள்ளாகியுள்ள கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பயணத்தடை விதித்து இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எவ்வாறாயினும், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாகவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத நல்லிணக்கத்திற்கு எதிராக இந்த போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதியும் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பின்னணியிலேயே அவர் வெளிநாடு சென்றமை விசேட அம்சமாகும்.
பௌத்தம் மற்றும் இந்து, இஸ்லாமிய மதங்களை அவமதிக்கும் வகையில் அவர் பிரசாரம் செய்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மாநாட்டுச் சட்டத்தின் கீழ் நாளை (17) அவரைக் கைது செய்வதற்கு சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.