குரங்கு அம்மைக்கான சுகாதார அவசரநிலைக்கு முடிவு!: உலகளாவிய சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய வைரஸ் நோயான (monkey pox) குரங்கு அம்மைக்கான 10 மாத கால உலகளாவிய சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
ஜூலை 2022இல் சர்வதேச அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், பொது சுகாதார அமைப்பும் அவசரநிலையை அறிவித்தது மற்றும் நவம்பர் மற்றும் பெப்ரவரியில் அதன் நிலைப்பாட்டை ஆதரித்தது.
மேலும், பொது சுகாதார அமைப்பின் அவசரக் குழுவின் பரிந்துரையின் படி, நோய்க்கான அவசரகால நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்தது.
இதுதொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகளவில் நோயினால் தாக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன் இந்த நோய் ஒரு அச்சுறுத்தல் நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆப்பிரிக்காவின் பகுதிகளில் இது நீண்ட காலமாக பரவலாக காணப்படும் ஒரு நோய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்மையில் கோவிட்-19 தொற்றும் சுகாதார அவசரநிலை பட்டியலில் இல்லை என்று ஐக்கிய நாடுகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.