பாலியல் இலஞ்ச விவகாரம் : செய்தி வாசிப்பாளர் இஷாரா தேவேந்திரவிடம் வாக்கு மூலம்: சட்டத்தரணி ஸ்வீனா சேங் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகள் ஆரம்பம்.
BY: M.F.M.Fazeer
சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான இஷாரா தேவேந்திரவிடம், அத்தொலைக்காட்சியின் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆரம்பகட்ட விசாரணைகள் கடந்த வாரம் ஊடகத் துறை அமைச்சில் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.
சட்டத்தரணி ஸ்வீனா சேங் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த குழு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி வாசிப்பாளர் இஷாரா தேவேந்திரவிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளது.
அதன்படி வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி, சுயாதீன தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள் பலரிடம் வாக்கு மூலம் பெற விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
அதன் பின்னர் வெளிப்படுத்தப்படும் விடயங்களை மையப்படுத்தி விசாரணைக் குழு தனது பரிந்துரைகளை முன் வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.