ஜனாதிபதியின் பிறந்த நாள் தேசத்துக்கு மிகவும் முக்கியமான நாளாக மாறியுள்ளது : எம்.பி.வஜிர அபேவர்தன: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தேசியத் தலைவரை கட்சி, நிற, மத பேதமின்றி நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும்

OruvanOruvan

Tree Planting Workshop Photo Credit - Getty Image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த நாள் தேசத்துக்கு மிகவும் முக்கியமான நாளாக மாறியுள்ளது எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியின் தனிப்பெருமையாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் எம்.பி.வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை மற்றும் மருத்துவ முகாம் சேவை செயலமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தேசியத் தலைவரை கட்சி, நிற, மத பேதமின்றி நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். அவர் கூறுவது போன்று அவர் இன்னும் பத்து வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தால், நாட்டின் அனைத்துக் கடன்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உலகிலுள்ள வேலையில்லா இளைஞர், யுவதிகள் எமது நாட்டுக்கு வேலைக்கு வரக்கூடிய பொருளாதாரம் உருவாக்கப்படுமெனவும், இதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.

Photo Credit - Getty ImagePhoto Credit - Getty Image

MP Vajira Abeywardhana Photo Credit - Getty Image

ஒட்டுமொத்த தேசமும் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த வேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தனது பிறந்தநாளுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் முழு தேசமும் மீண்டும் ஒருமுறை எழுச்சி பெற்றுள்ளது.

ஒரு தேசம் பொருளாதார ரீதியாக அழிக்கப்படும்போது, ​​அந்தத் தேசம் அங்கேயே முடிவடைகிறது. ஆனால், எம் அனைவரின் அதிர்ஷ்டவசமாக இலங்கைக்கு ஒரு பெரிய விருட்சம் போல நிழல் தரும் ரணில் விக்கிரமசிங்க, விழுந்து கிடந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்தார்.

அந்த வல்லமை கொண்ட தலைவரின் பிறந்தநாளை கட்சித் தலைமையகத்தில் இவ்வாறு கொண்டாடும் வாய்ப்புக் கிடைத்ததில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.