மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்கள் : டிரான் அலஸ் மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அழைப்பு: கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று முன் தினம் (07) நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்.

OruvanOruvan

Tiran Alles - Public security minister

BY: M.F.M. Fazeer

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது அவர்கள் மீது பொலிஸார் முன்னெடுத்த தாக்குதல்கள் குறித்து விளக்கம் கோர பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 13ம் திகதி காலை 10.00 மணிக்கு இவ்வாறு விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது நேற்று முன் தினம் (07) நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மற்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (8) நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க கையாண்ட உக்திகக்ள், களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரவே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.