T20 World Cup - பில் சால்ட் அதிரடி துடுப்பாட்டம்: இங்கிலாந்து அபார வெற்றி

OruvanOruvan

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

181 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணிணை எட்டு விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் பில் சால்ட் ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களையும், ஜோனி பேர்ஸ்டோவ் 48 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் பில் சால்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு 181 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு 181 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவுசெய்திருந்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை குவித்திருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஓட்டக் குவிப்பில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

அனைவரும் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டனர்.

அணித் தலைவர் ரோவ்மேன் பவல் 17 பந்துகளில் 36 ஓட்டங்களையும், பிராண்டன் கிங் 13 பந்துகளில் 23 ஓட்டங்களையும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 15 பந்துகளில் 28 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

தற்போது 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.