இலங்கை அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது: முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

இலங்கை அணி டெஸ் தொடரை கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து அணியின் தலைவராக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் தலைவராக மைக்கேல் பிரேஸ்வெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அனுபவமிக்க ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை தலைவராக நியமித்து நியூசிலாந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

OruvanOruvan

இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 531 ஓட்டங்களை பெற்றது. பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ஓட்டங்களைப் பெற்று பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.