இந்தியன் ப்ரீமியர் லீக் - 2024 ; குஜராத் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports Updates 04.04.2024

இந்தியன் ப்ரீமியர் லீக் - 2024 ; குஜராத் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 17 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன. அஹமதாபாத்தில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அறிவிப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 5 ஆம் திகதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா

ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.