ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் குவிப்பு: கொல்கத்தா அதிரடி துடுப்பாட்டம்

OruvanOruvan

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை குவித்திருந்தது.

இது ஐபிஎல் போட்டியில் அணி ஒன்றால் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரு அணி 263 ஓட்டங்கள் குவிக்கப்பட்டமையே சாதனையாக இருந்தது வந்தது.

எனினும், கடந்த 27 ஆம் திகதி மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ஓட்டங்களை குவித்து அந்த சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், இன்றைய தினம் கொல்கத்தா அணி 272 ஓட்டங்களை குவித்துள்ளது. இது ஐபிஎல் போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிகூடி ஓட்டங்களாகும்.

இன்றையப் போட்டியில் சுனில் நரைன் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி குறைந்த பந்துகளில் அரைச் சதம் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.