ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் விலகல்: முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News Updates 02.04.2024

ரி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் விலகல்

T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அறிவித்துள்ளார். அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து சந்திமால் விலகல்

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக போட்டியிலிருந்து விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எலில் தோனியின் புதிய சாதனை

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இடம்பெற்றவரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் பட்டியலில் தோனி முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதனடிப்படையில், 3 சிக்சர்கள் மூலம் தோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4ஆவது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். இதனால் தோனி 242 சிக்சர்களுடன் 4ஆவது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.

இன்று மோதிக்கொள்ளும் ரோயல் சேலஞ்சர்ஸ் - லக்னோ சூப்பர்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் - பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் இடத்துக்கு முன்னேறிய இராஜஸ்தான் ரோயல்ஸ்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் - இராஜஸ்தான் ரோயல்ஸ் போட்டி வரை, ராஜஸ்தான் ரோயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம்
பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முறையே மூன்றாம் இடத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் இடம்பிடித்துள்ளது.

மையாமி பொது விருது டென்னிஸ் : வெற்றியாளர் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மையாமி நகரில் நடப்பு மையாமி பொது விருது டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று விருதை வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் குரோவேஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜி செக் ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் 6-7(3), 6-3, 10-6 என்ற ஆட்டக்கணக்கில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது.