ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி - பந்து வீச முடிவு: முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports Updates 01.04.2024

ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 14வது போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவுசெய்துள்ளது

178 ஓட்டங்களுக்குள் சுருண்ட பங்களாதேஷ்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் முதல் இன்னிங்ஸில் இலங்கை 353 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைவருக்கு 12 இலட்ச ரூபாய் அபராதம்

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றியடைந்ததையடுத்து, இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் டெல்லி அணியினர் பந்து வீசவில்லை என்ற காரணத்தினால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட்க்கு ஐபில் 12 இலட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சென்னையை வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்தது

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தின போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.