தலைமை திமிரில் ஹர்திக் பாண்டியா: தொடரும் விமர்சனம்

OruvanOruvan

Hardik Pandya

அண்மைய தினங்களாக பரபரப்பாக பேசப்பட்ட இந்திய கிரிக்கெட் மைதானத்தில் சூடுபிடித்த ஒரு கதை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

“இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்... அது நம் நாடு.”

இது அஸ்வின் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட பதிவு.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் R. அஷ்வின் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இம்முறை மும்பையின் தலைமை மாற்றத்தால் ரசிகர்களின் கவனம் அணியின் மீது அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தலைமை மாற்றம் மூலம் மும்பை அணியில் இரு பிரிவுகள் உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் மற்றும் புதிய தலைவர் பாண்டியாவை சுற்றி அணியினர் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியாவின் தலைமைக்கு இஷான் கிஷான் தலைமையிலான புதுமுகங்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், லசித் மலிங்கவுடன் பாண்டியாவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

OruvanOruvan

தற்போது கிரிக்கெட் வீரர் மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

மலிங்கவின் பயிற்சியில் ஐந்து கோப்பைகளை தட்டிச் சென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில், சக வீரர்களுடன் கைகுலுக்கிய பாண்டியா எப்படி லசித் மலிங்கவைத் தள்ளிவிட்டார் என்பதைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களிலும் செய்தி இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

மும்பை அணி தலைவருக்கு கிரிக்கெட்டில் ஜாம்பவான் போன்ற ஒரு வீரரை மதிக்கத் தெரியவில்லை என குறித்த செய்திகள் பரவலாகி வருகின்றன.

OruvanOruvan

முதன்மை கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான மலிங்கவை ஹர்திக் பாண்டியா அவமதித்த சம்பவத்தை தொடர்ந்து அவரை அணி தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தான் சரியான முடிவு என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அணி தலைவர் ரோகித் சர்மாவையும் மரியாதை குறைவாக நடத்தியமை இரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

OruvanOruvan

வெற்றி என்பது அணியின் ஒற்றுமையில் தங்கியுள்ளது.

அணியின் தலைவரே இவ்வாறு செயற்படுவது மொத்த அணியையும் மாற்றி விடுகிறது. நன்றாக திறமைகளை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகளுக்கான காரணம் ஹர்திக் எனப் பேசப்பட்டு வரும் நிலையில் அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதே சிறந்த தீர்வு என விமர்சித்து வருகின்றனர்.