ஐ.பி.எல் ரி-20 கிரிக்கட் தொடரின் 11ஆவது போட்டி இன்று: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Sports News

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கட் தொடரின் 11ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. லக்னோவில் இன்று இரவு 7.30 இற்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.

மியாமி ஓபன் டென்னிஸ்ஸில் இறுதி போட்டிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்

அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ஒரு அரையிறுதிச் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவ் - ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.

இந்தியன் ப்ரீமியர் லீக் - 2024 ; லக்னோ - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 11 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன. லக்னோ - வாஜ்பாய் சர்வதேச விளையாட்டரங்கில் இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (30) இடம்பெறவுள்ளது. சட்டோகிராம் நகரிலுள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.