டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா: அடுத்த போட்டியில் அசத்துவாரா?

OruvanOruvan

ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பங்களாதேஸுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

இந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தனஞ்ஜெயா டி சில்வா 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் டி சில்வா 15 இடங்கள் முன்னேறி 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 695 புள்ளிகளுடன் 14வது இடத்தில் இருக்கும் அவர், முதல் 10 இடங்களுக்குள் முன்னேறுவதற்கு இன்னும் 40 புள்ளிகளே தேவைப்படுகின்றன.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் உள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற உள்ளது. இந்த போட்டியிலும் தனஞ்ஜெயா டி சில்வா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் தரவரிசையில் மேலும் முன்னேறுவார்.