முத்தமிட்டமைக்காக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு கோரிக்கை: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports Updates 28.03.2024

முத்தமிட்டமைக்காக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

2023ஆம் ஆண்டு மகளிர் உலகக் கிண்ணத்தை ஸ்பெயின் அணி வென்ற தருணத்தில் அணியின் தலைவர் ஜென்னி ஹெர்மோசோவின் உதட்டில் அவரது அனுமதியின்றி ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலஸ் முத்தமிட்டிருந்தார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக சட்டத்தரணிகள் இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரியுள்ளனர்.

OruvanOruvan

லத்தீன் அமெரிக்க கால்பந்து கிளப்புக்கு தோ்வான இந்திய வீரா்

ஐ.எஸ்.எல் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி கால்பந்து அணியில் ஆடி வரும் வளா்ந்து வரும் இந்திய கால்பந்து வீரா் பிஜய் சேத்ரி உருகுவே தலைநகா் மான்டெவிடியாவில் உள்ள 116 ஆண்டுகள் பழைமையான கிளப்பான காலன் கால்பந்து கிளப்பில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். இதன் மூலம் தென் அமெரிக்க கால்பந்து கிளப்பில் தொழில்முறையில் விளையாட்ட தோ்வான முதல் இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றுள்ளாா்.

OruvanOruvan

ஐ.பி.எல் 2024 ; ராஜஸ்தான் ரோயல்ஸ் - டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.

பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் விலகியுள்ளார்

பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது..