சானியா மிர்ஸாவை தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் திட்டம்: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்...

OruvanOruvan

29.04.2024 Sports Updates

சானியா மிர்ஸாவை தேர்தலில் களமிறக்க காங்கிரஸ் திட்டம்

ஹைதராபாத்தில் சானியா மிர்சாவை வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை அவர் மறுத்தால் அவரது தந்தையை போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் 10 ஆவது போட்டி - ஆர்.சி.பி - கே.கே.ஆர் பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது போட்டி பெங்களூரில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.

சேனாநாயக்க - மஹாநாம கல்லூரிகள் மோதும் மாபெரும் தங்க சமர்

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான தங்க சமர் கிரிக்கெட் போட்டி இன்று (29) கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.