பந்து வீச முன் தோனியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய இலங்கை வீரர்: வைரலாகும் காணொளி

OruvanOruvan

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன, நடப்பு ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டில் பந்து வீச முன் தோனியின் காலில் விழுந்து ஆசி வாங்கிய காணொளி வைரலாகியுள்ளது.

நேற்றைய போட்டியில் சென்னை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

காயம் காரணமாக பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிட்ட மதீஷ பத்திரன, நேற்றையப் போட்டியின் களமிறங்கினார்.

இந்த போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சாய் சுதர்சனின் விக்கெட்டை பத்திரன கைப்பற்றினார்.

இந்த போட்டியில் ஒன்பதாவது ஓவரை வீச பத்திரன அழைக்கப்பட்டார்.

இதன் போது களத்தடுப்பை சரிசெய்து கொண்டிருந்த சென்னை அணியின் முன்னாள் தலைவர் தோனியின் கால்களில் விழுந்து பத்திரன ஆசி பெற்றுக்கொண்டார்.

இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பத்திரனவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் பத்திரன மிகக் கச்சிதமாக பந்து வீசியிருந்தார். இது சென்னை அணி பெரிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாய்ப்பாக அமைந்தது.