மும்பை அணியை 31 ஓட்டங்களால் வீழ்த்திய சன்ரைசர்ஸ்: அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை

OruvanOruvan

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் எட்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிக கூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

இந்நிலையில், 278 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியுற்றது.