ஐபிஎல் டி20 ; ஹைதராபாத் - மும்பை அணிகள் இன்று பலபரீட்சை: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Sports News

ஐபிஎல் டி20 - ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலபரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொழும்பில் விசேட உதைப்பந்தாட்ட போட்டி

1990 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் பங்கேற்கும் விசேட உதைபந்தாட்ட போட்டியொன்று கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஷகிப்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் வகையில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) அழைக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.