ஐ.பி.எல் தொடர் ; ஆர்.சி.பி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை: விளையாட்டு செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

Short Story - Sports News

ஐ.பி.எல் தொடர் ; ஆர்.சி.பி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி பெங்களூரில் இலங்கை நேரப்படி இன்று (25) இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பங்களாதேஷுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு சாதகமான நிலை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. மூன்றாவது நாளான நேற்றைய ஆட்டம் நிறைவின்போது பங்களாதேஷ் அணி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது. இதன்படி இந்தப் போட்டி வெற்றி இலங்கைக்கு சாதகமாக காணப்படுகின்றது.