ரோயல் சேலஞ்சர்ஸ் வெற்றி: விராட் கோலி அரை சதம்

OruvanOruvan

IPl

இந்தியாவில் நடைபெற்றுவரும் 17 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற 6-லீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக தவான் 45 ஓட்டங்களைப் பெற்றார். ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 177 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 19.2 என்ற ஓவரில் 178 ஓட்டங்களை பெற்ற வெற்றி பெற்றது. ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை இழந்த ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலி - அனுஜ் ராவத் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றிபெற்றது. விராட் கோலி அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழியமைத்திருந்தார்.