சென்னை அணி 206 ஓட்டங்கள் குவிப்பு: முக்கிய விளையாட்டு செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

Sports News updates 26.03.2024

சென்னை அணி 206 ஓட்டங்கள் குவிப்பு

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் ஏழாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை குவித்துள்ளது.

நாணய சுழற்சியில் தோல்வி - சென்னை முதலில் துடுப்பாட்டம்

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் ஏழாவது போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், நாணய சுழற்சியின் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. இதன்படி சென்னை அணி துடுப்பெடுத்தாட தயாராகி வருகின்றது.

மகளிர் ஆசிய கிண்ணப் போட்டிகள் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ணப் போட்டிகள் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மகளிர் ஆசிய கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

OruvanOruvan

ஐ.பி.எல் ரி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டி சென்னை எம்.எ.சிதம்பரம் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்திற்கு தடையுத்தரவு

​​2023-24 போட்டித் தொடரின் ஒரு பிரிவில் விளையாடிய நான்கு பாடசாலைகளைத் தரமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ரிலிகேஷன் போட்டிகளை" நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தற்காலிகமாக தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் குறித்த தடை உத்தரவு ஏப்ரல் 8 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனவும், அன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் வீரரின் மன்கட் முயற்சியை கேலி செய்த இங்கிலாந்து வீரர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் காலித் அஹமட் மேற்கொண்ட மன்கடிங் முயற்சி தோல்வியடைந்தது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி, "மங்கட்டை விட மோசமான ஒன்று மட்டுமே உள்ளது... ஒருவரை மன்கட் செய்ய முயற்சித்து தோல்வியடைவது" என்று பென் டக்கெட் டுவீட் செய்துள்ளார்.