10 வருடங்களுக்கு பின் ஒரே போட்டியில் இரண்டு சதம்: தனஞ்சய டி சில்வா அசத்தல் துடுப்பாட்டம்

OruvanOruvan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா சதம் பெற்றுள்ளார்.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது தனஞ்சய டி சில்வா 179 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் போதும் அவர் சதம் பெற்றிருந்தார். 131 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வீரர் ஒருவர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே போட்டியில் 02 சதங்களை அடித்த சந்தர்ப்பம் இதுவாகும்.

போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 400 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கின்றது.

போட்டியின் முதலாவது இன்னிங்ஸின் போது கன்னி சதத்தை பதிவு செய்திருந்த கமிந்து மென்டிஸ் 90 ஓட்டங்களை கடந்து களத்தில் இருக்கின்றார்.