மும்பைக்கு 169 வெற்றி இலக்கு: விளையாட்டு செய்திகளின் தொகுப்பு

OruvanOruvan

Sports News Updates 24.03.2024

மும்பைக்கு 169 வெற்றி இலக்கு

ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் நாணய சுழற்சியில் வெற்றி - முதலில் பந்து வீச்சு

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இந்த தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடுகிறது. இந்தப் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி

2024 ஐ.பி.எல் தொடரின் நான்காவது போட்டியில் லக்னோவை எதிர்த்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

லக்னோ அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் நான்காவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று , இறுதிப்போட்டி தொடர்பில் வெளியான தகவல்

தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,ஐ.பி.எல். முதற்கட்ட அட்டவணைக்கமைய போட்டிகள் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நடைபெற உள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அஹமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை - அணிகளின் விவரங்கள் வெளியீடு

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை உலகளாவிய தகுதிச் சுற்று 2024க்கான அனைத்து அணிகள் மற்றும் அணிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. முதல் ஆறு அணிகள் - ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் - நேரடித் தகுதியைப் பெற்றன.

உலகளாவிய தகுதிச் சுற்றில் 10 அணிகள் உள்ளன: அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, தாய்லாந்து, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே.

மொஸ்கோ தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகள் ஒத்திவைப்பு

மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல்லைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் பரகுவே இடையே இடம்பெறவிருந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகளை ஒத்திவைக்க ரஷ்ய கால்பந்து யூனியன் (RFU) முடிவு செய்ததுள்ளது.மேலும், குறித்த போட்டி மீண்டும் தொடங்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அல்ட்ரா மரத்தானை குறுகிய நேரத்தில் கடந்த உலகின் முதல் பெண்

உலகின் கடினமான அல்ட்ரா மரத்தான்களில் ஒன்றாகக் கூறப்பட்டும் ஓட்டப்போட்டியை முடித்த முதல் பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்துள்ளார் ஸ்காட்லாந்தின் மிட்லோதியனைச் சேர்ந்த 40 வயதான ஜாஸ்மின் பாரிஸ். டென்னசியில் நடந்த பார்க்லி மராத்தான் போட்டியில் இரவும் பகலும் 59 மணி நேரம் 58 நிமிடங்கள் 21 வினாடிகள் ஓடி இறுதிக் கோட்டைக் கடந்தார்.