கொல்கத்தா மண்ணில் அதிரடி காட்டும் ஹைதராபாத் வீரர்கள்!: இன்றைய விளையாட்டுச் செய்திகள்

OruvanOruvan

கொல்கத்தா மண்ணில் அதிரடி காட்டும் ஹைதராபாத் வீரர்கள்!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுக்களை தமிழக வீரர் நடராஜன் வீழ்த்தியுள்ளார். மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து கொல்பத்தா தடுமாறி வருகின்றது. ஐபிஎல் சீசன் தொடக்க ஆட்டத்தில் டில்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரனின் அதிரடியான அரைசதம் விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றதால், ரிஷப் பந்தின் வெற்றிகரமான ரீடர்ன் நம்பிக்கை பொய்த்துப் போனது.

ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று

ஐ.பி.எல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதன்படி மகாராஜா யத்விந்தர் சிங் மைதானத்தில் பிற்பகல் 3.30 க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தவுள்ளன.இதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி கொல்கத்தாவில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

மியாமி ஓபனில் அரினா சபலெங்கா நேர் செட்களில் வெற்றி

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் அரினா சபலெங்கா மியாமி ஓபனில் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். தனது காதலன் கான்ஸ்டான்டின் கோல்ட்சோ தற்கொலை செய்துகொண்ட இரண்டு நாட்களுக்குள் போட்டிக்கு திரும்பிய சபலெங்கா, பவுலா படோசாவை நேர் செட்களில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

இந்த போட்டியில் படோசாவை 6-4 6-3 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலெங்கா வெற்றிபெற்றுள்ளார். உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாக சபலெங்கா இருக்கின்றமை குறிப்பிடத்தக்து.

முதல் போட்டியில் சென்னை அபார வெற்றி

2024 டாடா ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.