சென்னை அணிக்கு 174 வெற்றி இலக்கு: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News Updates 22.03.2024

சென்னை அணிக்கு 174 வெற்றி இலக்கு

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் 03 புதிய நியமனங்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 03 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளது. இதன்படி தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் கலாநிதி ஹஷான் அமரதுங்க விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராகவும், பிசியோதெரபிஸ்ட்மாக ஜொனதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

OruvanOruvan

இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பங்களாதேஷின் Sylhet நகரில் இலங்கை நேரப்படி இன்று (21) காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

OruvanOruvan

OruvanOruvan

17ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்

17ஆவது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் ஆரம்பமாகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் தொடங்குகின்றது. மேலும் இரவு 08.00மணி தொடக்கம் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.கே இப்போதே 20 வகிதம் மோசமான அணியாகிவிட்டது!

தோனி இல்லை என்பது 2024 ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 விகிதம் மோசமானதாக மாற்றியுள்ளது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.