பெங்களூர் அணியை தொடர்ச்சியாக எட்டு முறை வீழ்த்தியது சென்னை: ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சேப்பாக் மைதானத்தில் ஒன்பது முறை மோதியுள்ளன.
இதில் ஒரு போட்டியில் மட்டுமே பெங்களூர் அணியால் வெற்றிபெற முடிந்துள்ளது. மீதமான எட்டுப் போட்டிகளிலும் சென்னை அணியின் ஆதிக்கம் தான்.
பெங்களூர் அணிக்கு எதிராக கேப்பாக் மைதானத்தில் சென்னை அணி தொடர்ந்தும் எட்டாது முறையாக தனது வெற்றியை நேற்றைப் போட்டியில் பதிவு செய்துள்ளது.
2024 டாடா ஐ.பி.எல் தொடர் நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.
ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை
மிகவும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்றையப் போட்டி இடம்பெற்றிருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி விளையாடியது.
இரு அணிகளுக்கும் இடையே 2008 முதல் இந்த மைதானத்தில் 9 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதல் போட்டியில் மட்டுமே பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட அதிக வெற்றி இதுவாகும்.
மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் தொடர்ந்து 07 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத்தில் அந்த அணி அதிரடியாக துடுப்பெடுத்தாடியது.
எனினும், சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சில் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
புள்ளிப் பட்டியலில் கணக்கை ஆரம்பித்தது சென்னை
பெங்களூர் அணி 20 ஓவர்களின் ஆறு விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்த அணி சார்பில் அனுஜ் ராவத் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
சென்னை அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், நேற்றையப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.
174 என்ற வெற்றி இலங்கை துரத்திய சென்னை அணி எட்டுப் பந்துகள் மீதமிருக்க நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், புள்ளிப் பட்டியலிலும் தனது கணக்கை ஆரம்பித்துள்ளது.
சென்னை அணியின் வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா பெரும் பங்காற்றியிருந்தார். முதல் முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் அவர் அதிரடியாக துடுப்பெடுத்தாடியிருந்தார்.
வெறும் 15 பந்துகளில் மூன்று நான்கு ஓட்டங்கள், மூன்று ஆறு ஓட்டங்கள் அடங்களாக 37 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியிருந்தார்.