தோனியிடமிருந்து தலைமை பதவி ஏன் பறிக்கப்பட்டது?: அணியின் பயிற்சியாளர் அறிவிப்பு

OruvanOruvan

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியை மகேந்திர சிங் தோனியே வழிநடத்தி வந்தார்.

என்றாலும் நடப்பு ஐ.பி.எல் தொடருக்கு திடீரென ருத்துராஜ் கெய்க்வாட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை 22ஆம் திகதி முதல் போட்டியில் சென்னை அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவரை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.