ஐந்து வருடங்களில் இயங்கப்படாத விளையாட்டுப் பாடசாலைகள்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

21.03.2024 Sports News

ஐந்து வருடங்களில் இயங்கப்படாத விளையாட்டுப் பாடசாலைகள்

திறமையான தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 22 விளையாட்டுப் பாடசாலைகள் கடந்த ஐந்து வருடங்களில் இயங்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாலிபால் லீக் 3-வது சீசன் போட்டிகள் - மாலை 6.30 மணிக்கு பலப்பரீட்சை

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் கோழிக்கோடு ஹீரோஸ், டெல்லி டூபான்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் இன்று மாலை 6.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கை அணியின் நான்கு வீரர்கள் ஐ.பி.எல். தொடரை இழக்கும் சாத்தியம்

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட உபாதை காரணமாக தில்ஷான் மதுஷங்க இந்த வருடத்துக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரும் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பது குறித்த நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது.

ஐ.சி.சி ரி20 துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவர் கிரிக்கெட்டுக்கான ரி20 தரவரிசை பட்டியலில் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான சூர்யகுமார் யாதவ் (861 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பில் சால்ட்டும்(802 புள்ளி), 3வது இடத்தில் முகமது ரிஸ்வான் (800 புள்ளி) ஆகியோரும் உள்ளனர்.

தலைமைத்துவத்தில் தோனியை விட ரோகித் சர்மா சிறந்தவர்

ஐ.பி.எல். போட்டித் தொடரில் தோனியை விட ரோகித் சர்மா தலைமைத்துவத்தில் சிறந்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை வென்றுள்ளதாகவும் வெற்றிகரமான தலைவரை மாற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய தலைவராக அந்த அணி நியமித்துள்ளதாகவும் பட்டேல் கூறியுள்ளார்