உலகின் முன்னணி வீரர்களுக்கு நிகராக நிஸ்ஸங்க: ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம்

OruvanOruvan

Pathum Nissanka breaks into ODI top 10

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 3 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஆடவருக்கான தரப்படுத்தல் பட்டியல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நேற்று (20) வெளியிடப்பட்டது.

இதற்கமைய, பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

இதேவேளை, தொடர்ந்தும் இந்திய அணியின் சுப்மன் கில் 2ஆம் இடத்திலும் விராட் கோலி 3ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் பந்துவீச்சு தரப்படுத்தலில் தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியில் முதல் 10 இடங்களில் இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் இடம்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.