மீண்டும் இலங்கை டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பிய ஹசரங்க: ரசிகர்கள் மகிழ்ச்சி

OruvanOruvan

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்க இதனை தெரிவித்துள்ளார்.

வனிந்து ஹசரங்க கடந்த வாரம் கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு இதனை அறிவித்துள்ளதாக உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க இடம்பிடித்துள்ளார்.

தனஞ்சய டி சில்வா தலைமையிலான 17 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்க 196 ஓட்டங்களையும், நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஓனஸ்ட் மாதம் தனது டெஸ்ட் ஓய்வை ஹசரங்க அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வனிந்து ஹசரங்க மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளமைக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.