நடத்தை விதிகளை மீறியதற்காக ஹசரங்க குற்றவாளியாக அறிவிப்பு: பங்களாதேஷூக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இருந்து இடைநீக்கம்

OruvanOruvan

நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஹசரங்க மீண்டும் டெஸ்ட போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 17 பேர் கொண்ட இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கவும் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் பங்களாதேஷுக்கு எதிரான தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, நடுவரை விமர்சித்ததாக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஹசரங்கவின் நடத்தை தொடர்பாக நடுவர், போட்டி நடுவரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த குற்றத்திற்காக 50 சதவீத அபராதம் மற்றும் மூன்று குறைபாடு புள்ளிகளை ஹசரங்க பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.