தனி அறையில் மணிக்கணக்கில் அழுத அஸ்வின்: இன்றைய முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Sports News

தனி அறையில் மணிக்கணக்கில் அழுத அஸ்வின்

எம்.பி.ஏ. படிப்பதா? கிரிக்கெட்டை தொடருவதா? என்ற குழப்பத்தில் பல மணி நேரம் தனியாக அழுது புலம்பியதாக மனம் திறந்து பேசயுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அண்மையில் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார்.

அதேபோல டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 516 விக்கெட்டுகள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

பங்களாதேஷ் வெற்றி - தொடரை பறிகொடுத்தது இலங்கை

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 235 என்ற இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கில துடுக்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.2 ஓவர்களில் வெற்றி இலக்கை இடைந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றிக்கொண்டுள்ளது.

OruvanOruvan

இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே சதம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வரும் நிலையில் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியில் சார்பின் ஜனித் லியனகே சதம் கடந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் நகரில் ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.