இந்துக்களின் சமரில் வெற்றி வாகைச் சூடிய யாழ்.இந்துக் கல்லூரி: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports news

இந்துக்களின் சமரில் வெற்றி வாகைச் சூடிய யாழ்.இந்துக் கல்லூரி

இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றி வாகைச் சூடியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆகிப் ஜாவேத் (Aaqib Javed) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதிபெற்ற இலங்கை அணி

2026ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் முகாமையாளர்கள் இருவர் இலங்கையை விட்டு வெளியேற தடை

இந்திய கிரிக்கெட் முகாமையாளர்கள் இருவர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் 'லெஜண்ட்ஸ் கிரிக்கெட் கிண்ணம் 2024' தொடர்பில் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.