ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் - 2ஆவது சுற்றில் சிந்து தோல்வி: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் - 2ஆவது சுற்றில் சிந்து தோல்வி
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான கொரியாவின் அன் சே யங்குடன் மோதினார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 19-21, 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கட் போட்டி இன்று (15) Chattogramஇல் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.