ரஞ்சி கோப்பை 42வது முறையாக வென்றது மும்பை: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News Updates 14.03.2024

ரஞ்சி கோப்பை 42வது முறையாக வென்றது மும்பை

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 224 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ஓட்டங்களுக்கு சரிந்தது. 2ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ஓட்டங்களை சோ்த்து நிறைவு செய்தது.

இதன்மூலம், இறுதி ஆட்டத்தில் 538 ஓட்டங்களை என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வந்த விதா்பா அணி 368 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

விதர்பா அணியின் தலைவர் அக்ஷய் வத்கா் சதமடித்து (102) இறுதி வரை போராடி ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுடன் இருந்த விதர்பா அணி உணவு இடைவேளைக்குப் பிறகு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

OruvanOruvan

இந்துக்களின் சமர் நாளை ஆரம்பம்

இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் 15 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன்,13 ஆவது தடவையாக இரு கல்லூரிகளும் மோதுகின்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்துக்குள்ளானர்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார்.அனுராதபுரம், திரிப்பனை 117ஆவது மைக்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் பயணித்த வாகனம் பாரவூர்தியொன்றுடன் மோதுண்டதில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று(13) மாலை மன்னார் நகரசபை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இதன் போது மாற்றாற்றல் கொண்டவர்களின் பல்வேறு போட்டிகள் இடம் பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் சுப்மன் கில் - அஸ்வின் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக சுப்மன் கில் நிச்சயம் உருவாகுவார் என்று நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் 5 போட்டிகளில் விளையாடி 400 ரன்களை விளாசி இருக்கிறார். 2 சதம் மற்றும் 2 அரைசதம் உட்பட 400 ரன்களை சுப்மன் கில் விளாசியதன் மூலமாக அவர் மீதான விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan