தோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்?: மௌனம் கலைந்தார் காசி விஸ்வநாதன்

OruvanOruvan

Cricket Player Mahendra Singh Dhoni

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களின் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை அணிக்கு எம்.எஸ்.தோனி இதுவரை காலமும் தலைவராக செயற்பட்டு வந்துள்ளதுடன், ஐந்து முறை ஐ.பி.எல் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

42 வயதான அவர் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தோனியை தெய்வமாக மதிக்கின்றனர்

தோனியை சென்னை அணியின் ரசிகர்கள் தெய்வமாக மதிக்கின்றனர். கடந்த பருவத்தில் காயங்களால் அவதிப்பட்டு வந்த அவரின் துடுப்பாட்டமும் சரிந்திருந்தது.

இப்போது, மிகத் தெளிவான கேள்வி என்னவென்றால், எம்.எஸ் தோனிக்கு பிறகு சென்னை அணியின் தலைவர் யார்? என்பதுதான்.

இது குறித்து சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிடுகையில்,

“அடுத்த தலைவர் மற்றும் துணை தலைவர் குறித்த கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். இந்த விடயம் தொடர்பில் உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனிவாசனின் உத்தரவு

எவ்வாறாயினும், சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசன், தலைவர் பதவி தொடர்பான விவாதங்கள் உள்ளக மட்டத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பில் பொது விவாதங்களில் இருந்து விலகி, முடிவெடுக்கும் செயல்முறையை பயிற்சியாளர் மற்றும் தலைவரிடம் விட்டுவிட வேண்டும் என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சீனிவாசனின் உத்தரவின்படி, தலைவரும் பயிற்சியாளரும் நியமனம் குறித்து முடிவு செய்வார்கள், இறுதி செய்யப்பட்டவுடன், அவர்கள் தகவலை தனக்கு தெரிவிப்பார்கள்.

தலைவர் தெரிவு விடயத்தில் இரகசியத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் காசி விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

'தலைவரும் பயிற்சியாளரும் முடிவு செய்து எங்களுக்கு உத்தரவு கொடுப்பார்கள், அதுவரை அனைவரும் அமைதியாக இருப்போம்' என்று காசி விஸ்வநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.