பாகிஸ்தான் - நியூஸிலாந்து டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Sports

பாகிஸ்தான் - நியூஸிலாந்து டி20 தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!

அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Pakistan announce details of New Zealand series ahead of T20 World Cup

பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் மத்திய அமைச்சராக நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவரான மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு பிசிபியின் முழுநேர தலைவராக நியமிக்கப்பட்ட நக்வி, இப்போது ஒரே நேரத்தில் மற்றொரு பணியை தொடரவுள்ளார்.

OruvanOruvan

PCB chief Mohsin Naqvi appointed as Pakistan union minister

ஓபன் பேட்மிண்டன் போட்டி - 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, ஜெர்மனியின் யுவோன் லியை எதிர்த்து விளையாடினார்.இதில் சிந்து 21-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யுவோன் லி காயத்தால் விலகினார். இதனால் சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

OruvanOruvan

இலங்கை - பங்களாதேஷ் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி பங்களாதேஷின் சட்டோகிராம் (Chattogram) நகரிலுள்ள சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.