ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports Updates 12.03.2024

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜெய்ஸ்வால்

ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் 712 ஓட்டங்களை குவித்து அசத்தினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியன் வெல்ஸ்: இளம் வீரரிடம் தோல்வியை தழுவிய நோவக் ஜோகோவிச்

இந்தியன் வெல்ஸின் மூன்றாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச்சை 20 வயது வீரர் லூகா நார்டி தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 123 ஆவது இடத்தில் உள்ள இத்தாலிய வீரர் 6-4 3-6 6-3 என்ற கணக்கில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரரரை வீழ்த்தினார்.

OruvanOruvan

Novak Djokovic knocked out by lucky loser Luca Nardi

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

நாளை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

OruvanOruvan

Sri Lanka announces a 16-member ODI squad to take on Bangladesh!

லங்கா பிரிமியர் லீக் - “காலி மார்வெல்ஸ்“ஆக பெயர் மாற்றம் பெற்ற காலி அணி

இலங்கையில் நடைபெறுகின்ற லங்கா பிரிமியர் லீக்கின் 5ஆவது பருவகாலத்துக்கான போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் காலியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அணி “காலி மார்வெல்ஸ்“ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் லங்கா டி 10 போட்டியில் புதிய அணியொன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில், குறித்த அணி “மொரட்டு மார்வெல்ஸ்“ என்ற பெயரில் களமிறங்கவுள்ளது. இவை நேற்றைய தினம் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது.

இந்தியன் வெல்ஸ்: எம்மா ரடுகானுவை வீழ்த்திய பெலாரஷ்ய வீராங்கனை

இந்தியன் வெல்ஸில் நடந்த மூன்றாவது சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானுவை (Emma Raducanu) 6-3 7-5 என்ற நேர் செட்களில் பெலாரஷ்ய உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா (Aryna Sabalenka) தோற்கடித்தார்.

OruvanOruvan

Emma Raducanu crashes out of Indian Wells in straight sets to Aryna Sabalenka

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவுக்கு வழங்க வேண்டும்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவுக்கு வழங்க வேண்டும் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கு இது நல்ல முதலீடாக இருக்கும் என்று அவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேங்காய் உடைத்து கடவுளின் ஆசியுடன் பயிற்சியில் குதித்த ஹர்த்திக்பாண்டியா

எதிர்வரும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கும் ஹர்த்திக்பாண்டியா, தான் பயிற்ச்சிக்காக செல்லும் முன் தேங்காய் உடைத்து கடவுளின் ஆசீர் பெற்று சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

OruvanOruvan