காயத்தால் மூன்றாவது போட்டியை தவறவிடும் பத்திரன: இன்றைய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News updates 08.02.2024

காயத்தால் மூன்றாவது போட்டியை தவறவிடும் பத்திரன

காயம் காரணமாக சில்ஹெட்டில் நாளை இடம்பெறும் பங்களாதேஷுடனான மூன்றாவது போட்டியில் இலங்கை அணியின் முன்னணி பந்து வீச்சாளர் மதீஷா பத்திரன விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

Matheesha Pathirana will not be available for selection for the 3rd T20I

வனிதாபிமானா விருதினை வென்றார் தருஷி கருணாரத்ன

இலங்கையில் மிகவும் பிரபலமான மகளிருக்கான 'வனிதாபிமானா' விருதினை தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி தில்சரா கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Tharushi Karunaratne

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லஹிரு குமார, பத்தும் நிஸங்க ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம்:

  • பத்தும் நிஸ்ஸங்க

  • அவிஷ்க பெர்னாண்டோ

  • குசல் மெண்டீஸ் (தலைவர்)

  • சதீர சமரவிக்ரம

  • சரித அசலங்க (உப தலைவர்)

  • ஜனித் லியனகே

  • வனிந்து ஹசரங்க

  • துனித் வெல்லலாகே

  • பிரமோத் மதுஷான்

  • லஹிரு குமார

  • மகேஷ் தீக்ஷன

  • தில்ஷான் மதுஷங்க

  • கமிந்து மெண்டீஸ்

  • அகில தனஞ்சய

  • செஹான் ஆராச்சிகே

  • சாமிக கருணாரத்ன

உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்டப்போட்டி

முல்லைத்தீவு- உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவர்களின் 2024 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டி ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை ந.பவிராஜிமும் ,இரண்டாம் இடத்தை ஜெ.தியாகசீலனும், மூன்றாம் இடத்தை வி.அபிசனும் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை .ச.அபிசாவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை மோ.துர்க்கா மற்றும் இ. பன்சிகாவும் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஆரம்ப விழாவில் 180 படகுகள்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக சீன் ஆற்றில் கண்கவர் ஆரம்ப விழா நடைபெறவுள்ளதுடன் அதனை அனைவரும் கண்டு களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.