நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை: முக்கிய விளையாட்டு செய்திகளின் தொகுப்பு..

OruvanOruvan

09.03.2024 - Tamil Sports News

நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 24 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளதுடன், தொடரையும் 2 - 1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

T-20 கிரிக்கட் இறுதிப் போட்டியில் இலங்கை அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

OruvanOruvan

மூன்றாவது டி20; பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி

சில்ஹெட்டில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ள இலங்கையுடனான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

OruvanOruvan

Bangladesh won the toss and elected to field first!

இந்தியா அபாரா வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

OruvanOruvan

They complete a remarkable 4-1 series victory with an impressive performance in Dharamsala

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பேட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 23 பதக்கங்கள்

மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட பேட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 23 பதக்கங்களை வென்றுள்ளது.15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை பேட்மிண்டன் அணிகள் 08 தங்கப்பதக்கங்களையும் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்புப் போட்டிகளில் 09 தங்கப் பதக்கங்களையும் 06 வெள்ளிப் பதக்கங்களையும் இலங்கை வீரர்கள் பெற்றுள்ளனர்.

OruvanOruvan

இலங்கை - பங்களாதேஷ் இறுதி T-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணியளலில் ஆரம்பமாகவுள்ளது.

OruvanOruvan

டி20 உலகக் கிண்ணம்; அமெரிக்காவின் ஆடுகளங்கள் பற்றி அறிய முற்படும் ஹத்துருசிங்க

2024 டி20 உலகக் கிண்ணம் அமெரிக்காவிலும் கரீபியனிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்க அங்குள்ள ஆடுகளங்களைப் பற்றி, குறிப்பாக டல்லாஸில் உள்ள ஆடுகளங்களைப் பற்றி அறிய முயற்சிக்கிறார்.

OruvanOruvan

Hathurusinghe wants data on USA pitches ahead of T20 World Cup

ஹாமில்டன் மசகட்சா சிம்பாப்வே கிரிக்கெட்டின் பணிப்பாளர் பதவியலிருந்து விலகல்

ஹாமில்டன் மசகட்சா (Hamilton Masakadza) சிம்பாப்வேயின் கிரிக்கெட் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு சிம்பாப்வே தகுதி பெறத் தவறியமையே அவர் பதவி விலகுவதற்கான பிரதான காரணம் என்று கூறப்படுகிறது.

OruvanOruvan

Hamilton Masakadza steps down as Zimbabwe director of cricket