இரண்டாவது டி20 : பங்களாதேஷ் அணி வெற்றி: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்
இரண்டாவது டி20 : பங்களாதேஷ் அணி வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது டி20; நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
சிலேட்டில் சிறிது நேரத்தல் ஆரம்பமாகவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பங்களாதேஷ் களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடும்.
அசித்த பெர்னாண்டோவுக்கு காயம்
வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ காயம் அடைந்துள்ளதால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை தேசிய அணி பெரும் அடியை எதிர்கொண்டுள்ளது.
மார்ச்சில் தென்னாப்பிரிக்கா பயணிக்கும் இலங்கை மகளிர் அணி
2024 ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இலங்கை மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளை பந்து போட்டியில் ஈடுபடவுள்ளது.
5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
தரம்சாலாவில் நாளை (07) ஆரம்பமாகவுள்ள இந்தியாவுடனான 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இடம்பெற்றுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் வேகமாக பந்து வீசி ஷப்னிம் இஸ்மாயில் சாதனை
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் (Shabnim Ismail), பெண்கள் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவு வேகமாக பந்து வீச்சு சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் நடந்த மகளிர் பிரீமியர் லீக்கின் போது, வலது கை வீராங்கனை மணிக்கு 130 கிமீ வேகத்தில் பந்து வீசினார்.
இலங்கை - பங்களாதேஷ் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (6) பிற்பகல் 5.30 இற்கு சில்ஹெட் (Sylhet) சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.