முதல் டி20; பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News

முதல் டி20; பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி

சிலேட்டில் ஆரம்பமாகியுள்ள இலங்கையுடனான முதலாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி தற்சமயம் துடுப்‍பெடுத்தாடி வருகிறது.

OruvanOruvan

1st T20I: Bangladesh won the toss and elected to field first

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவராக பேட் கம்மின்ஸ் நியமனம்

2023 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக பேட் கம்மின்ஸ் (Pat Cummins) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 சீசனில் ஹைதராபாத் அணியை எய்டன் மார்க்கரம் வழிநடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Pat Cummins named Sunrisers Hyderabad captain

ஐசிசி சிறந்த வீரருக்கான பட்டியலில் பத்தும் நிஸங்கவும்

2024 பெப்ரவரி மாதத்துக்கான ஆடவர் சிறந்த வீரர் விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸங்கவும் உள்வாங்கப்பட்டுள்ளார். இந்த தேர்வில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் உள்ளனர்.

OruvanOruvan

ICC Men's Player of the Month nominees for February 2024 named

சான் டியாகோ ஓபன்; உக்ரேனிய வீராங்கனையை வீழ்த்தி பட்டம் வென்றார் கேட்டி போல்டர்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சான் டியாகோ ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் கேட்டி போல்டர் ( Katie Boulter) 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரேனின் ஆறாம் நிலை வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக்கை (Marta Kostyuk) வீழ்த்தி பட்டம் வென்றார்.

OruvanOruvan

San Diego Open: Katie Boulter wins WTA 500 title

இலங்கை - பங்களாதேஷ் அணிகள் மோதும் முதல் இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று (04) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியில் வனிது ஹசரங்க மற்றும் பத்தும் நிசங்க ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.