முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி: மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை முன்னிலை

OruvanOruvan

Bangladesh vs Sri Lanka

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்கிரம அதிகபட்சமாக 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டதுடன் குசல் மெந்திஸ் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய Jaker Ali 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் Mahmudullah 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்றது.