ரி20 தொடரில் இருந்து குசல் ஜனித் பெரேரா விலகல்: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports Short Stories 01.03.2024

என்னை நிறுத்த முடியாது!புகைப்படத்தினை வெளியிட்ட ரொனால்டோ

'Can't Stop' என்ற பதிவுடன் ரொனால்டோ உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவினை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் : காலிறுதியில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி- செக் நாட்டின் ஆடம், உருகுவேயின் ஏரியல் பெஹர் ஜோடியுடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரோகன் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் போபண்ணா ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

OruvanOruvan

ரி20 தொடரில் இருந்து குசல் ஜனித் பெரேரா விலகல்

உடல் நலக்குறைவு காரணமாக குசல் ஜனித் பெரேரா வங்கதேசத்துக்கு எதிரான ரி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், மேலும் அவர் இன்று நாடளாவிய ரீதியில் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களுக்கான சிவப்பு பந்து கிரிக்கெட் போட்டி இம்மாத இறுதியில்

பெண்களுக்கான சிவப்பு பந்து (red-ball ) கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் புனேவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு ஆகிய ஆறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்கவுள்ளன.

பிரபல கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் தடை

பிரபல கால்பந்து வீரர் பால் போக்பாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான போக்பா, பிரான்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக உள்ளார்.