திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஜப்பானிய பேஸ்பால் நட்சத்திரம்: உலகின் முக்கிய விளையாட்டு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Sports News updates 29.02.2024

திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஜப்பானிய பேஸ்பால் நட்சத்திரம்

ஜப்பானிய பேஸ்பால் சூப்பர் ஸ்டார் ஷோஹெய் ஓஹ்தானி (Shohei Ohtani) தனது திருமணம் குறித்த அறிவிப்பினை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது இடுகை ஒரு மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் விருப்பங்களைப் பெற்றது.

OruvanOruvan

The Los Angles Dodgers stars has closely guarded his private life

பங்களாதேஷ் புறப்பட்ட இலங்கை அணி

பங்களாதேஷ் அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கெடுப்பதற்காக வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை டி20 அணி இன்று அதிகாலை பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுள்ளது - ஸ்ரீலங்கா கிரிக்கெட்

OruvanOruvan

Our T20I squad, led by the Wanindu Hasaranga, is on their way.

பொதுநலவாய செஸ் போட்டி - இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 11 பதக்கங்கள்

மலேசியாவின் மேலகா சர்வதேச வர்த்தக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய செஸ் வல்லவர் போட்டியில் ஒரு தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கள் பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது.

OruvanOruvan