சர்வதேச ரி20 அரங்கில் நமீபிய வீரர் அதிவேக சதம்: 33 பந்துகளில் லோஃப்டி-ஈடன் சதம்

OruvanOruvan

Namibia's Loftie-Eaton smashes fastest T20I hundred

சர்வதேச ஆடவர் ரி20 கிரிக்கெட் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையினை நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி-ஈடன் (Jan Nicol Loftie-Eaton) படைத்துள்ளார்.

நேபாளத்தில் நடைபெறும் முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

கீர்த்திபூரில் நேபாள அணியுடனான முதல் ரி20 போட்டியின் போதே லோஃப்டி-ஈடன் 33 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.

லோஃப்டி-ஈடன் நேபாள அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மொத்தமாக 36 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களை எடுத்தார்.

இதன்மூலம் நேபாள வீரரான குஷால் மல்லாவின் (Kushal Malla) முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 3 விக்கெட்டுக்கு 314 ஓட்டங்களை எடுத்திருந்தபோது குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் பெற்றார்.

அதே போட்டியில் தான் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் ரி20 அரங்கில் அதிவேக அரைசதம் அடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

Fastest T20 Century