காயத்தால் மூன்றாவது ரி20 போட்டியை தவறவிடும் வோர்னர்: 2024 ஐ.பி.எல். தொடரில் உடல் தகுதியுடன் திரும்புவார் என நம்பிக்கை

OruvanOruvan

David Warner ruled out of the New Zealand tour due to an injury.

நியூஸிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெறவுள்ள மூன்றாவது ரி20 போட்டியினை அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோர்னர் தவறவிடவுள்ளார்.

காயம் காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதிபடுத்தியுள்ளது.

எனினும், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அவர் முழு உடற் தகுதியுடன் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

6 அரைசதங்கள் உட்பட 516 ஓட்டங்கள்

ரிஷப் பந்தின் பயங்கரமான வகான விபத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய வோர்னர், 6 அரைசதங்கள் உட்பட 516 ஓட்டங்களுடன் அணிக்காக அதிக ஓட்டம் குவித்த வீரராக உருவெடுத்தார்.

டேவிட் வோர்னரின் ஓய்வு

37 வயதான டேவிட் வோர்னர் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் ஆரம்பமாகவுள்ள 2024 டி20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.