ஐபிஎல் 2024 ; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்: அனைத்து விளையாட்டு செய்திகளும் ஒரே பார்வையில்

OruvanOruvan

22.02.2024 - Sports News

ஐபிஎல் 2024 ; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்

இவ்வாண்டின் இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல் ) டி20 தொடரின் முதல் போட்டியில் நடப்பு வெற்றியாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மார்ச் 22ஆம் திகதி மோத உள்ளன.

2024 ஐபிஎல் : முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் முதல் 21 ஆட்டங்களுக்கான அட்டவணை, நேரங்கள் மற்றும் இடங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டிகள் மார்ச் 22 அன்று தொடங்கும்.

OruvanOruvan

𝙎𝘾𝙃𝙀𝘿𝙐𝙇𝙀 for the first 21 matches of TATAIPL 2024 is out!

ஐபிஎல் 2024ல் இருந்து விலகினார் முகமது ஷமி

இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.
முகமது ஷமிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதினால் அடுத்த சில மாதங்கள் ஷமி ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதுடன், அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கு குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

OruvanOruvan

Shami

பாலியல் வன்புணர்வு; பார்சிலோனாவின் முன்னாள் வீரருக்கு சிறைத் தண்டனை

பார்சிலோனா இரவு விடுதியில் பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் முன்னாள் பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் (Dani Alves) குற்றவாளி என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

Dani Alves trial: Ex-Brazil player guilty of nightclub rape

கட்டார் ஓபன்; இளம் வீரரிடம் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

கட்டார் ஓபன் இரண்டாவது சுற்றில் செக் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஜக்குப் மென்சிக்கிடம் பிரிட்டனின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி முர்ரே 7-6 (8-6) 6-7 (3-7) 7-6 (7-4) என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

OruvanOruvan

Andy Murray loses to teenager Jakub Mensik

ஆப்கன் அணிக்கு ஆறுதல் வெற்றி

இலங்கை-ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கட் போட்டிகளின் கடைசிப் போட்டியில் ஆப்கான் அணி மூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டித் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் ஆப்கன் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்து கொண்டுள்ளது.